இலங்கையில் திடீரென கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கொவிட் 19 வைத்தியசாலை!

இலங்கையில் மிகப் பெரிய கொவிட் 19 வைத்தியசாலையொன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த வைத்திசாலையை இலங்கை இராணுவத்தினர் கட்டி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதுடன் மரணங்களும் அதிகரிக்கின்றது. இந்நிலையில், இலங்கை இராணுவத்தினர் இவ்வாறு ஒரு பெரிய கொவிட் 19 வைத்தியசாலையை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வைத்தியசாலை சீதுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2,500 படுக்கை வசதிகளுக்கு ஏற்பட நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலையில் , எதிர்வரும் இரு தினங்களில் மேலும் 5,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement

இப்பிரில் எந்த சந்தர்ப்பத்திலும் 1,200 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய வசதிகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.