இரு பவுசர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

இரு பவுசர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று 2 மணியளவில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87 ஆம் கட்டை சந்திப் பகுதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் எரிபொருட்களை ஏற்றிச் சென்ற பவுசர்கள் வாகனமொன்றும், குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற பவுசர்கள் வாகனமுமே இவ்வாறு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் 35 மற்றும் 46 வயது சாரதியொருவரும் உதவியாளர் ஒருவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் திடீரென கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கொவிட் 19 வைத்தியசாலை!
Next articleயாழில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றுள்ள திருட்டு சமப்வம்