சுகாதார நடைமுறைகளை மீறியமையால் வவுனியாவில் கடைகள் பூட்டு

கடைகள் மற்றும் மரக்கறிகள் விற்பனை நிலையங்கள் மீது சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டதுடன், முககவசம் அணியாதவர்கள், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கையானது இன்றைய தினம் வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வவுனியா வடக்கு பகுதியில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பொலிஸாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் நெடுங்கேணி பகுதியில் வீதியோர வர்த்தக நிலையங்கள், மரக்கறிக் கடைகள், பழக்கடைகள் என்பவற்றை பார்வையிட்டதுடன், அங்கு சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், முககவசம் அணியாதோர் மற்றும் முககவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன் பொலிஸாரால் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சுகாதார நடைமுறைகளை மீறிய ஐந்து கடைகள் உடனடியாக பூட்டப்பட்டுள்ளது .

இதன்போது பொலிஸாரால் சுகாதார அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றுள்ள திருட்டு சமப்வம்
Next articleயாழில் மற்றுமொரு கொரோனா மரணம்!