நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்புத்த, கெஸ்பேவ கிழக்கு, மாகந்தர மேற்கு, பெல்ஹேன மற்றும் நிவுன்கம கிராம சேவகர் பிரிவுகள்.

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிம்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் மதுகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யட்டியான மேற்கு கிராம சேவகர் பிரிவு.

கம்பஹா மாவட்டத்தின் கடவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்தெனிய கிழக்கு, சூரியபாலுவ மேற்கு, சூரியபாலுவ வடக்கு, பஹல கரகஹமுன வடக்கு மற்றும் இஹல கரகஹமுன வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளிட்ட பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Previous articleயாழில் மற்றுமொரு கொரோனா மரணம்!
Next articleயாழ்.மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!