இலங்கையில் 120,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

நாட்டில் மேலும் ஆயிரத்து 97 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 521ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 878 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து ஆயிரத்து 763 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 745 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 18 ஆயிரத்து 13 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை ஒன்பது இலட்சத்து 28 ஆயிரத்து 776 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 235 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ்.மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!
Next articleமன்னாரில் நூறு படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் தயார்!