வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சைக்காக 200 கட்டில்களுடன் தயார் நிலையில்!

கொரோனா சிகிச்சைக்காக 200 கட்டில்களைக் கொண்டதாக வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்கள் போடப்பட்டுள்ளதுடன்,

200 கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில், வவுனியா பொருளாதார நிலையம் கொரோனா நோயாளர்களை உள்வாங்குவதற்கு தயாரான நிலையில் தற்போது சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் பைஸர் தடுப்பூசி பாவனைக்கு அனுமதி!
Next articleவவுனியாவில் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி துன்புறுத்தி காணொளியை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய நபர் கைது!