கனடாவில் தமிழ்துறை கல்விநெறியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம்!

Toronto மற்றும் கனடா முழுவதும் வசிக்கும் தமிழர்கள் சார்பாக, university of toronto வில் தமிழ்துறை கல்விநெறியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்திற்காக 3 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைத்துள்ளது .

உலகெங்கிலும் உள்ள 3800 நிறுவனங்கள், தனியார் சேவைகள், இலாபநோக்கற்ற சேவை நிறுவனங்கள், தனிநபர்கள் போன்றவர்களால் இந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் SJV செல்வநாயகம் தொண்டு நிறுவனத்தின் பங்கு அளப்பரியது.

இதன் மூலம் university of Toronto வில் தமிழ் பாடம் அறிமுகம் செய்யப்படும்.

கனடாவில் இதுவே முதல் முறை ஆகும்.

300, 000 தமிழர்களைக் கொண்ட scarborough, இந்தியாவிற்கு வெளியே அதிகளவு வெளிநாட்டு தமிழர்கள் வாழும் பகுதியாக உள்ளது.

இந்த வெற்றிக்காக toronto tamil congress மற்றும் ஒன்றிணைந்து செயற்பட்ட அனைவரிற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதாலும் விடாமுயற்சியாலும் மிகப்பெரிய விடயங்களை சாதிக்க முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

Previous articleவவுனியாவில் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி துன்புறுத்தி காணொளியை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய நபர் கைது!
Next articleநோயாளியுடன் அவசரமாக புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ்!.. டேக் ஆஃப் ஆகும் போது கழன்று விழுந்த சக்கரம்!