தொடர்ந்து 4 லட்சத்தை தாண்டியுள்ள தினசரி பாதிப்புகள்! – அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,14,188 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,14,91,598 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,915 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,34,083 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,76,12,351 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 36,45,164 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 16,49,73,058 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Previous articleநோயாளியுடன் அவசரமாக புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ்!.. டேக் ஆஃப் ஆகும் போது கழன்று விழுந்த சக்கரம்!
Next articleமுதல் பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி நீக்கம் செய்யப்பட்டார்!