முதல் பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி நீக்கம் செய்யப்பட்டார்!

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் ஆலோசனைக்கு அமைய, முதல் பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபரான பிம்சானி ஜா சிங்க ஆரச்சி, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஒம்பூட்ஸ்மன் (குறை கேள் அதிகாரி) பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனைத் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனகூறுகையில், பொலிஸ் திணைக்களத்தை மீள கட்டமைக்கும் செயற்பாடுகளுக்கு அமைய பொலிஸ் மா அதிபரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், விரைவில் ஜா சிங்க ஆரச்சிக்கு வேறு ஒரு பதவி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிம்சானி ஜா சிங்க ஆரச்சின் கீழ் குறித்த ஒம்பூட்ஸ்மன் பிரிவில் சேவையாற்றிய ஏனைய அதிகாரிகளையும் வேறு ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் கடமைகளை முன்னெடுக்க பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதொடர்ந்து 4 லட்சத்தை தாண்டியுள்ள தினசரி பாதிப்புகள்! – அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!
Next articleஅவசியம் ஏற்பட்டால் நாட்டை முழுமையாக முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்!