அவசியம் ஏற்பட்டால் நாட்டை முழுமையாக முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்!

அவசியம் ஏற்பட்டால் நாட்டை முழுமையாக முடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கோவிட் ஒழிப்பு பற்றிய இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக் கூறினார். அவசியமான தருணத்தில் கோவிட் அச்சுறுத்தல் ஏற்படுகின்ற பிரதேசங்களை மாத்திரம் முடக்கம் செய்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் பரிசோதனையின் முடிவு வெளிவரும்வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Previous articleமுதல் பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி நீக்கம் செய்யப்பட்டார்!
Next articleஇலங்கையின் அடுத்த சட்டமா அதிபராக தமிழர்!