வவுனியாவில் நீரில் மூழ்கிய குடும்பஸ்தரை காணவில்லை

வவுனியா பம்பைமடுப்பகுதியில்உள்ள நீர்தேக்கத்தில் (கருங்கல் அகழ்வதற்காக வெட்டப்பட்ட குழி) மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்….

இன்றையதினம் வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள குறித்த நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர்.

இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கியநிலையில், நீரில் இழுத்துச்செல்லப்பட்டு மூழ்க்கியுள்ளார்.

இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீருனுள் இறங்கிதேடியுள்ளனர். எனினும் அவரை மீட்கமுடியவில்லை.

சம்பவம் தொடர்பாக கிராமமக்களுக்கும் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

நீருனுள் மூழ்கியநபரை மாலை 3மணியளவில் இருந்து 6மணிவரை கிராமத்து இளைஞர்கள் தேடியபோதும் அவரை மீட்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றிருந்தனர்.

சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே மாயமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅனைத்து சுற்றுலா தலங்களையும் மூட தீர்மானம்
Next articleஇலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை!