யாழ்.மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 18 பேர் உட்பட வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 18 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் சிறைசாலையில் 9 பேருக்கும்,

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 3 பேருக்கும், நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், தெல்லிப்பழையில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையில் தொற்றுக்குள்ளான 5 போில் 3 பேர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் எனவும், மேலும் ஒருவர் சுன்னாகம் மின்சாரசபை சுற்றடலில் நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

மேலும் மன்னார் மாவட்டத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்ற இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

Previous articleஇலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை!
Next articleயாழில் வாக்காளர் எண்ணிக்கை வீழ்ச்சி – 18 ஆயிரம் பேர் வரை நீக்கம்