பாக்யராஜ், பூர்ணிமாவுக்கு கொரோனா!

பிரபல இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டுள்ளது. இந்த தகவலை பாக்யராஜ் – பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 10 நாட்களாக பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவரிடமும் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனது பெற்றோர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ள தகவல் திரையுலகினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இருவரும் விரைவில் குணமாக வேண்டும் என்று திரையுலகினர் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் வாக்காளர் எண்ணிக்கை வீழ்ச்சி – 18 ஆயிரம் பேர் வரை நீக்கம்
Next articleநேற்றய தினம் பதிவான இலங்கையில் உச்சபட்ச கொரோனா உயிரிழப்பு!