கொழும்பு சென்று வந்த யாழ் யுவதிக்கு கொரோனா!

யாழ் வலிகாமம் மேற்கிலுள்ள கிராமிய சித்த வைத்திய நிலையமொன்றில் பணியாற்றும் பெண்உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் இணைக்கப்பட்ட பயிலுனர் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளார். நேற்றுஇரவு வெளியான பிசிஆர் முடிவில் அவர் தொற்றிற்குள்ளானமை உறுதியானதை அடுத்து, அங்கு பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் யுவதி சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியபோதும் கடமைக்கு சமூகமளித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா அறிகுறிகள் வலுவடைந்ததை தொடர்ந்து, பிசிஆர் மாதிரி பெற்ற பின்னர் கடமைக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற போதே அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

பாதிக்கப்பட்ட யுவதி முக ஒப்பனை துறையில் பணியாற்றிவரும் நிலையில் கொழும்பில் நடந்த திருமணமொன்றிற்கு மணமகள் ஒப்பனைக்காக அண்மையில் சென்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் கொரோனா அச்சத்தால் செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு!
Next articleயாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப தீர்மானம்!