வவுனியா பம்பைமடுப்பகுதியில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

வவுனியா பம்பைமடுப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்றையதினம் வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் சென்றுள்ளனர்.

இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்துச்செல்லப்பட்டு மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீருனுள் இறங்கித் தேடியுள்ளனர். எனினும் அவரை மீட்கமுடியவில்லை.

நீருனுள் மூழ்கிய நபரை மாலை 2 மணியளவில் இருந்து 6மணி வரை கிராமத்து இளைஞர்கள் தேடியபோதும் அவரது நிலை தெரியாமல் கிராம மக்கள் திரும்பிச்சென்றிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கடற்படையின் சுழி ஓடிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நபரின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 50) என்ற குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleயாழில் பிடிக்கப்பட்ட முதலை கிளிநொச்சி புலிக்குளத்தில் விடப்பட்டது!
Next articleதலைவர் பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்!