வவுனியா பம்பைமடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வவுனியா பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் சென்றுள்ளனர்.

இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியதாகவும், இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீரினுள் இறங்கி தேடியுள்ளனர். எனினும் அவரை மீட்க முடியவில்லை எனவும் முதற்கட்ட தகவல்கள் மூலம் அறியமுடிந்தது.

இந்நிலையில் இன்று காலை சனிக்கிழமை கடற்படையின் சுழி ஓடிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleதிருகோணமலையில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு கொரோனா!
Next articleஅதிரடியாக முடக்கப்பட்ட மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள்!