அதிரடியாக முடக்கப்பட்ட மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள்!

யாழ்ப்பாணம் மற்றும் வத்தளையின் சில பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் வத்தளை ,கெரவலப்பிட்டிய, ஹேகித்த, பள்ளியவத்த தெற்கு, கெரநகபொகுன, கலுடுபிட மற்றும் மட்டுகம்மல ஆகிய கிராமசேகவர் பிரிவுகள் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்ப்பட்டுள்ளன.

மேலும் யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் வடக்கு மற்றும் மத்திய கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்,

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் நாகொடை தெற்கு பகுதியின் விஜித மாவத்தை, மஹா வஸ்கொட வடக்கு மற்றும் யடதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

Previous articleவவுனியா பம்பைமடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!
Next articleமன்னாரில் 15 சிறுமிகள் இருந்த இல்லத்தில் பயங்கர மின்னல் தாக்கம்