மன்னாரில் 15 சிறுமிகள் இருந்த இல்லத்தில் பயங்கர மின்னல் தாக்கம்

மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள ´வெற்றியின் நல் நம்பிக்கை´ இல்லத்தின் மீது நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக இடி, மின்னல் தாக்கத்தினால் எரிந்து சேதமாகி உள்ளது.

இதன்போது குறித்த இல்லத்தில் சிறுமிகள், பாடசாலை மாணவிகள் என 15 பேர் இருந்துள்ளனர்.

எனினும் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது. இந்த நிலையிலே குறித்த இல்லத்தின் மீது இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இல்லத்தில் உள்ள சிறுமிகள், பாடசாலை மாணவிகள் வெளியேற்றப்பட்டு அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்சார சபைக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த மின்சார சபையினர் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

Previous articleஅதிரடியாக முடக்கப்பட்ட மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள்!
Next articleநயினாதீவு நாகவிகாராதிபதிக்கும் கோவிட் தொற்று?