நயினாதீவு நாகவிகாராதிபதிக்கும் கோவிட் தொற்று?

நயினாதீவு நாகவிகாரையின விகாராதிபதியும் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகத்தையடுத்து இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய வெசாக் தின நிகழ்வுகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய வெசாக் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நாகதீபம் விஹாரையில் முன்னெடுப்பத்றகு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நயினாதீவு நாகவிகாரைப் பணிக்குச் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதனால் நாகவிகாராதிபதி உள்ளிட்டவர்களிற்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேள்கொள்ளப்பட்டது.

நயினாதீவின் நாக விகாரையை சூழவுள்ள பிரதேசம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அப்பகுதியை அளவீடு செய்வதற்காக சென்றவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விகாராதிபதி உள்ளிட்ட இரு பௌத்த பிக்குகளிற்கும், 9 கடற்படையினர் உட்பட 27 பேரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதியும் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகத்தையடுத்து இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய வெசாக் தின நிகழ்வுகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

Previous articleமன்னாரில் 15 சிறுமிகள் இருந்த இல்லத்தில் பயங்கர மின்னல் தாக்கம்
Next articleநாட்டில் மேலும் 970 பேருக்கு கொவிட்!