தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் சென். கூம்ஸ் தோட்டத்தின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 140 பேருக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
மேற்படி தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் தொழிற்சாலையைச் சேர்ந்த 30 பேருக்கு நேற்று (07) கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதற்கமைய, இன்றைய தினம் அவர்களுடன் தொடர்பினை கொண்டிருந்தவர்கள் இவ்வாறு கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.