யாழ் பருத்தித்துறையில் களவாடப்பட்ட நீர் இறைக்கும் மின் மோட்டார் புன்னாலைக்கட்டுவானில் விற்பனை!

பருத்தித்துறை, தும்பளை சிவப்பிரகாசம் மகாவித்திலையத்தின் நீர் இறைக்கும் மின் மோட்டார் ஒரு மாதங்களுக்கு முன் களவாடப்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருட்டப்பட்ட மின் மோட்டார் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவனில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவுனருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,பருத்தித்துறைக் பொலிஸாரால் மின் மோட்டார் இன்று மீட்கப்பட்டுள்ளது.
திருட்டுடன் சம்பந்தப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்

Previous articleதலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவகத்தின் 140 பேருக்கு கொவிட் பரிசோதனை!
Next articleவடக்கில் தொடரும் கொரோனா அபாயம் : இன்றும் 25 பேருக்கு தொற்று