திருகோணமலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்!

திருகோணமலை மவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற வாகனமொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில் அக்போபுர 87 ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் 36 வயதுடைய ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹபரனையிலிருந்து கந்தளாய் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர் திருகோணமலையிலிருந்து தம்புள்ளைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தில் வேகமாக சென்று நேருக்கு நேர் மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீமெந்து லொறியின் சாரதியை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள ஒரு சந்தைத் தொகுதி!
Next articleயாழில் கணவன் உயிர்மாய்த்த தகவலறிந்து மனைவியும் உயிர் விட்டார்!