யாழ் கல்வியங்காடு பொதுச் சந்தை மூடப்பட்டது!

யாழ்ப்பாணம், கல்விங்காடு பொதுச் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளின்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றத் தவறியதால் யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் சந்தை மூடப்பட்டுள்ளது.

பொதுச் சந்தையின் நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றபோது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்காணிப்பதற்காகச் சென்றிருந்தனர்.

இதன்போது, சந்தையில் வியாபாரிகள் உட்பட பலர் முகக்கவசம் அணியாமலும் சுகாதார இடைவெளியைப் பேணாமலும் இருந்துள்ளனர்.

இதையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கல்வியங்காடு பொதுச் சந்தையை மறுஅறிவித்தல் வரை மூடியுள்ளனர்.

Previous articleஇலங்கை மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டுவர இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடு!
Next articleகொரோனா அபாய வலமாக மாறும் வடமாகாணம்!