கொரோனா அபாய வலமாக மாறும் வடமாகாணம்!

யாழ்.மாவட்டத்தில் 14 பேர் உட்பட வடக்கில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 7 பேருக்கும், தெல்லிப்பழை மற்றும் ஊர்காவற்றுறை பகுதிகளில் இருவருக்குமாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.

இதேபோல் மன்னார் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலை மற்றும் பளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுகளில் 3 பேருக்கும்,

வவுனியா மாவட்டத்தில் குருக்கல் புதுக்குளம் பகுதியில் 5 பேருக்கும், வவுனியா வைத்தியசாலையில் 2 பேருக்குமாக 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

Previous articleயாழ் கல்வியங்காடு பொதுச் சந்தை மூடப்பட்டது!
Next articleயாழ். நல்லுரை மையமாக கொண்டு பரவிவரும் ஐரோப்பிய திரிபு கொவிட் – 19 வைரஸ்!