பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக், கொரோனாவிக்கு பலி!

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 78.

1943-ல் பிறந்த கல்தூண் திலக், நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவில் நடித்தவர். பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, வெள்ளிக்கிழமை விரதம் போன்ற படங்களில் நடித்தார்.

சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடிப்பில் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய கல்தூண் படம் 1981-ல் வெளியானது. இப்படத்தில் சிவாஜியின் மகனாக நடித்தார். இதனால் அவர் கல்தூண் திலக் என அழைக்கப்பட்டார்.

ஏ.வி.எம். ஸ்டூடியோவில் உதவி படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய கல்தூண் திலக், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

சென்னையில் வசித்து வந்த கல்தூண் திலக், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

Previous articleயாழ். நல்லுரை மையமாக கொண்டு பரவிவரும் ஐரோப்பிய திரிபு கொவிட் – 19 வைரஸ்!
Next articleயாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள் நஞ்சற்ற விவசாய முயற்சியில் இறங்கினர்!