சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை தேடி பேலியகொட பொலிஸார் நேற்று (07) இரவு விஷேட சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பகினிகஹபில்லேவ பகுதியின் சிலர் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பேலியகொட போரணுவ வத்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.