நேற்றயதினம் 22 கொரோனாத் தொற்று நோயாளிகள் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்யை தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து நாட்டில் அதிகபடியான ஒற்றை நாள் உயிரிழப்புகள் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதன்படி கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 764 இல் இருந்து 786 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்று மொத்தமாக 1,896 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 123,234 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றிலிருந்து 103,098 பூரண குணமடைந்துள்ளதுடன், தற்சமயம் வைத்தியசாலைகளில் 19,350 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் 24 மணித்தியாலமும் இடைவிடாத கட்டுமான பணியில் கொரோனா சிகிச்சை நிலையம்
Next articleமட்டக்களப்பு மாவட்டத்தில் 11 மாதக குழந்தையுடன் காணாமல் போன இளம் தாய்!