இலங்கையில் நாளாந்தம் 200 கோவிட் மரணங்கள் ஏற்படும் அபாயம் – சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா வைரசினால் நாளாந்தம் 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என சர்வதேச அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

தற்போதைய புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து வோசிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்தசுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐஎச்எம்மீ தெரிவித்துள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் 20876 பேர் கொரோனா வைரசினால் உயிரிழப்பார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூன்14 ம் திகதியளவில் நாளாந்த உயிரிழப்பு உச்சத்தை அடையும் நாளாந்தம் 264 பேர் கொரோனாவினால் உயிரிழப்பார்கள் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் பின்னர் இந்த உயிரிழப்புகள் நாளாந்தம் 88 ஆக குறைவடையும் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூன் 16 ம் திகதியளவில் மருத்துவமனை பயன்பாடு உச்சத்தை அடையும் என தெரிவித்துள்ள வோசிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்தசுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐஎச்எம்மீ தெரிவித்துள்ளது.

Previous articleமட்டக்களப்பு மாவட்டத்தில் 11 மாதக குழந்தையுடன் காணாமல் போன இளம் தாய்!
Next articleகொரோனா தொற்று உறுதியான மாணவனை பரீட்சைக்கு அழைத்து சென்ற மாமா க்கு நேர்ந்த கெதி!