இன்றயதினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 426 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக இடைவெளியை பேணாமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இதுவரை 6,965 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleபல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன்!
Next articleநாட்டில் இன்று 1, 732 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!