காபுல் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மேற்குப் பகுதியான ஷியா மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) பாடசாலை ஒன்றின் அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மோசமான தாக்குதலில் 150 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதால், அவர்களுக்கான சிகிச்சையை அளிப்பதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் அனேகமானோர் இள வயது பெண்கள் எனக்கூறப்படுகிறது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த தாக்குதல், ஆப்கானிஸ்தானின் சிறுபான்மை சமூகம் ஒன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை உரிமைகோராத போதும், தலிபான் அமைப்பினர் நாடளாவிய தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக ஆப்கான் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Previous articleகைதடி பாலத்தடியில் வீதியைவிட்டு பாய்ந்த பேருந்து!
Next articleமுகக்கவசம் அணியாதவர்களைத் தூக்கிச் சென்ற பொலிஸார்!