முகக்கவசம் அணியாதவர்களைத் தூக்கிச் சென்ற பொலிஸார்!

பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலகவின் தலைமையில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, முகக் கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினைப் பின்பற்றாத 30இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத சிலரை பொலிஸார் தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவமும் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Previous articleகாபுல் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
Next articleஇலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவிவருவதாக எச்சரிக்கை!