யாழில் கைதடி பிரபல சைவ ஹோட்டல் உரிமையாளர் உட்பட 27 பேருக்கு கொரோனா!

யாழ்.போதனா வைத்தியசாலையின் கொரோனா பரிசோதனை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் யாழ்.மாவட்டத்தில் 21 பேரும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 பேரும்,

வவுனியா மாவட்டத்தில் 02 பேரும்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் கைதடியில் மிகப் பிரபலமான சைவ உணவகத்தின் உரிமையாளரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாளாந்தம் பல நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த சைவ உணவகத்திற்கு செல்வதால் பெருமளவானவர்களுக்கு தொற்றுப் பரவல் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சுகாதார தரப்பினரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய தொற்றாளர்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியாகும்.

Previous articleயாழ் மேலதிக அரசஅதிபர் பிரதீபனுக்கு கொரோனா!
Next articleபண்டாரவளை நகர பொதுச்சந்தை கொரோனா அச்சம் காரணமாக அதிரடியாக மூடப்படுகிறது