பண்டாரவளை நகர பொதுச்சந்தை கொரோனா அச்சம் காரணமாக அதிரடியாக மூடப்படுகிறது

பண்டாரவளை நகர பொதுச்சந்தை இன்று (09) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும், பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை சில வியாபாரிகள், அத்துமீறி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து பண்டாரவளை மாநகர சபை, பிரதேச செயலக சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பண்டாரவளை பொலிஸார் இணைந்து அவர்களை திரும்பியனுப்பினர்.

வெல்லவாய, ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகளே இவ்வாறு திருப்பி அனுப்பட்டனர்.

Previous articleயாழில் கைதடி பிரபல சைவ ஹோட்டல் உரிமையாளர் உட்பட 27 பேருக்கு கொரோனா!
Next articleஇலங்கையில் ஒரேநாள் பாதிப்பு 2,500ஐ கடந்தது!