இலங்கையில் வரும் மாதம் முதல் வைரசினால் நாளாந்தம் 200இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்புகள் ஏற்படும்? எச்சரிக்கும் அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா வைரசினால் நாளாந்தம் 200இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐ.எச்.எம்.மீ தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் நிலைமை மற்றும் உயிரிழப்புக்களின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிடுகையில்,

செப்டம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் 20, 876 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பார்கள்.

ஜூன்14ஆம் திகதியளவில் நாளாந்த உயிரிழப்பு உச்சத்தை அடையும் நாளாந்தம் 264 பேர் கொரோனாவினால் உயிரிழப்பார்கள் எனவும் பின்னர் இந்த உயிரிழப்புகள் நாளாந்தம் 88 ஆக குறைவடையும் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூன் 1ஆம் திகதியளவில் மருத்துவமனை பயன்பாடு உச்சத்தை அடையும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

Previous articleகொரோனா அபாயத்தில் தெற்காசியாவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது இலங்கை!
Next articleகுவைட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்