குவைட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்

குவைட் இராச்சியத்தில் பணி புரிந்து வந்த இந்நாட்டு வீட்டுப் பணிப் பெண் ஒருவர் எதியோப்பிய நாட்டை சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று (09) காலை 8.30 மணி அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

39 வயதுடைய மஹவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் குறித்த இலங்கை பணிப்பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று (09) நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்இ இன்று (10) நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு குறித்த பெண் குவைட் இராச்சியத்திற்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கையில் வரும் மாதம் முதல் வைரசினால் நாளாந்தம் 200இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்புகள் ஏற்படும்? எச்சரிக்கும் அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை
Next articleகொரோனா சிகிச்சையில் குணம் அடைந்தவர்களை குறிவைக்கும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பங்கஸ்!