கொரோனா சிகிச்சையில் குணம் அடைந்தவர்களை குறிவைக்கும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பங்கஸ்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தில், மனித உயிர்களை கொன்று குவிக்கின்றது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சமாளிக்க முடியாத பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

நாளுக்கு நாள், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குஜராத்தில் கொரோனா சிகிச்சையில் குணம் அடைந்தவர்களை மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பங்கஸ் வேகமாக தாக்கி வருகிறது.

இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் கண்ணை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதுவரை 80 பேர் கருப்பு பங்கஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்

குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. .

இவர்கள், நீரழிவு நோய் மற்றும் ரத்த புற்றுநோயோடு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பின் போது அதிக அளவு மருந்துகளை உட்கொண்டதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பங்கஸ் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

Previous articleகுவைட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்
Next articleஇந்தியாவில் கொரோனா சிகிச்சை மையமாக மாறிய கிறிஸ்தவ தேவாலயம்!