இந்தியாவில் கொரோனா சிகிச்சை மையமாக மாறிய கிறிஸ்தவ தேவாலயம்!

இந்தியாவில் கோவிட் – 19 தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில்,ஒக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கொரோனா நோயாளிகள் நொடிக்குநொடி அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பெரும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அதிகமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென்னிந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கோவிட் – 19 சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அ

தில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleகொரோனா சிகிச்சையில் குணம் அடைந்தவர்களை குறிவைக்கும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பங்கஸ்!
Next articleநாட்டை முழுமையாக அல்லது 75% மூடுவதற்கு தயாராகுங்கள்!