குவைத்தில் கொலைசெய்யப்பட்ட இலங்கை யுவதியின் சடலம் கொண்டுவரப்பட்டது!

குவைத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரால் குறித்த யுவதி கொலைசெய்யப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இலங்கை யுவதி கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் நேற்றுக் காலை கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநாட்டை முழுமையாக அல்லது 75% மூடுவதற்கு தயாராகுங்கள்!
Next articleதிருகோணமலையில் இளம் நபரொருவர் கொரானாவுக்கு பலி!