கொரோனா வைரஸால் பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழ் சினிமாவில் மருதுபாண்டி என்ற படத்தின் மூலமாக 1990இல் திரையுலகில் அறிமுகமானவர் ஜோக்கர் துளசி.
அத்தோடு இவர் தமிழ் சினிமாவில் 70களிலிருந்து பணிபுரிந்து வருபவர் நடிகர் ஜோக்கர் துளசி.
மேலும் இவர் தமிழச்சி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சீரியல்கள் எடுத்துக் கொண்டால் வாணி ராணி, கோலங்கள் என்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இவரது மரண செய்தி அவருடன் பணிபுரிந்த சக நடிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.