நாடு பாரிய ஆபத்தில் உள்ளது : எச்சரிக்கும் ரணில்

மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொரோனா நிலைமை மோசமடைந்து வருகிறது என்றும் தடுப்பூசிகள், ஒக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் 100 க்கும் மேற்பட்ட நாளாந்த இறப்புக்கள் பதிவாகலாம் என்ற தரவுகளை சேகரிக்கும் நிறுவனத்தை மேற்கோளிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் அரசியல் அல்ல என்றும் அரசாங்கதை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல என்றும் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க மக்களின் உயிரைப் பாதுகாப்பதாகும் என்றும் கூறினார்.

எனவே தற்போது கொரோனா பரவலுக்கு எதிராக செயற்படாமல் விட்டால் பல உயிர்களை இழக்க வேண்டி ஏற்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.

Previous articleஇன்றும் 1581 பேருக்கு கொரோனா தொற்று!
Next articleசுகாதார சட்டத்தை மீறுவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டாம்