கனடா Brompton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்வின் சுரேஸ்குமார் அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று மாலை அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்வரத்தினம், அன்னபூரணம் செல்வரத்தினம் தம்பதிகள், முருகேசு கார்த்திகேசு(நெடுந்தீவு, பாண்டியன்குளம்) தனலட்சுமி கார்த்திகேசு தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த சுரேஸ்குமார் செல்வரத்தினம்(கண்ணன்) தயாளினி சுரேஸ்குமார் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
சஸ்வின், அஸ்விகா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்
