நாளை முதல் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டும் வெளியே செல்ல அனுமதி அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில், பொலிஸார் அறிவிப்பு

நாளை இரவு 11 மணி தொடக்கம் 17ம் திகதி திங்கள் கிழமை அதிகாலை 4 மணிவரை சாதாரண ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்லும் அனுமதியும் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டுச் செல்லும் நடைமுறை நாளை முதல் அமுலாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, வேலை தவிர வேறு காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் அடையாள அட்டைகளை காட்டி

வெளியே செல்லமுடியும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, அடையாள அட்டை இல்லாதவர்கள்

கடவுச்சீட்டு அல்லது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

  1. அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 0, 2,4,6,8 ஐ கொண்டவர்கள் இரட்டை நாட்களில் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.இறுதி இலக்கமாக 1,3,5,7,9 உள்ளவர்கள் ஒற்றை நாட்களில் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
  2. அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு அல்லது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும்.
  3. வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் அல்லது மருத்துவ சேவைகளை வாங்குபவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தாது.
  4. வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரும் அவர்களின் அடையாள அட்டையை கொண்டு செல்வது அத்தியாவசியம்.
Previous articleகொழும்பில் ஒரே நாளில் 606 பேருக்கு கொவிட் தொற்று!
Next articleகுருக்கள்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!