வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நால்வருக்கு கொரோனா

வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களிற்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்களில் நால்வருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வைத்தியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

Previous articleமுள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி பொலிஸ், இராணுவம் குவிப்பு!
Next articleயாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி