இலங்கையில் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி!

இலங்கையில் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தேவையான தடுப்பூசிகளை வௌிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

13 மில்லியன் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை ரஷ்யாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Previous articleஎதிர்வரும் 4 வாரங்கள் தீர்மானமிக்கது!
Next articleயாழில் திருமண நிகழ்வில் பங்குகொண்ட 21 பேருக்கு கொரொனா உறுதி!