மூன்று வயது மகளை கொதிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் வைத்துகொன்ற கொடூர தந்தை!

லிபியாவில் தந்தை ஒருவர் மூன்று வயது மகளை கொதிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் வைத்து கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

லிபியாவின் Cyrenaica-வில் உள்ள Ajdabiya நகரில் வசிக்கும் Rabiha Khaled Abdel Hamid என்ற 3 வயது சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்பட்டதால், கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த சிறுமியின் தந்தை, சிறுமியை கொதிக்கும் சுடு நீர் நிரப்பப்பட்ட குளியல் தொட்டிக்குள் சில மணி நேரம் வைத்துள்ளார்.

அதன் பின் இது குறித்து சிறுமியின் உறவினர்களுக்கு தெரியவர, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுமிக்கு வயிற்று போக்கு ஏற்பட்ட நிலையில், அவரை குளிக்க உட்காரும் படி சிறுமியின் தந்தை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், சிறுமி அழுது கொண்டே இருந்ததால், அவர் குளியல் தொட்டிக்குள் போட்டுவிட்டு, அப்படியே சில மணி நேரம் விட்டுள்ளார். அதன் பின் இது குறித்து உறவினர் ஒருவருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த அவர் உடனடியாக சக உறவினர்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்களிடம், சமயலறையில் இருந்த சுடு தண்ணீர் சிறுமி மீது விழுந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து புகார் தெரிவிக்க, இதில் தாய் மற்றும் தந்தை ஒருவருமே குற்றங்களை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும் குறித்த இருவரின் பெயர்கள், விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதால், இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Previous articleஒன்ராறியோவில் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!
Next articleபூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் தோன்றிய பிரமாண்டமான அழகிய பிள்ளையார் சிலை