கோவிட் சிகிச்சையின் போது ஆண் செவிலியரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்!

கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளி ஒருவர், ஆண் செவிலியரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் அன்றையே தினமே பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற இச்சம்பவம் ,தற்போது ஆண் செவிலியரின் கைதுக்கு பின்னரே வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் போபால் அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஏப்ரல் 6ம் தேதி 40 வயதாகும் சந்தோஷ் ஆஹிர்வார் என்ற ஆண் செவிலியர் ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக மருத்துவர் ஒருவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார் பாதிக்கப்பட்ட அப்பெண். அன்றைய தினம் மாலையே அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காது பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் நிஷத்புரா பொலிஸ் நிலையத்தில் செவிலியர் சந்தோஷ் ஆஹிர்வார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழக்கும் முன் மருத்துவர்களிடம் தன்னைப் பற்றிய தகவல்களை வெளியில் கூறிவிட வேண்டாம் என்று அப்பெண் வேண்டுகோள் வைத்ததால் அப்பெண் குறித்த எந்த தகவலையும் பொலிஸார் வெளிப்படுத்தவில்லை என சொல்லப்படுகிறது.

மேலும் பணி நேரத்தில் அவர் குடித்துவிட்டு சக பெண் செவிலியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஏற்கனவே குறித்த நபர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் யானையின் தாக்குதல் : அச்சத்தில் கிராம மக்கள்
Next articleஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்து யாழ். குருநகரில் தங்கியிருந்த குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா!