யாழ். மாதகல் கடற்பகுதியில் 55 கிலோ கஞ்சா மீட்பு

யாழ். மாதகல் – புளியந்துறைப் பகுதியில் 55 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மாதகல் கடற்பரப்பு ஊடாக படகின் மூலம் கஞ்சா கொண்டுவரப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே குறித்த தொகை கஞ்சா மீட்கப்பட்டது.

குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கடற்படையினால் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ச்தேகத்திற்கி;மான முறையில் நின்றிருந்த படகொன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் இளவாலைப் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதடுப்பூசி போட்டவர்கள் இனி முககவசம் அணியத் தேவையில்லை!
Next articleமற்றுமொரு கர்ப்பிணித்தாய் கொரொனாவினால் மரணம்!