கிளிநொச்சி மாவட்டத்தின் இயல்புநிலை இன்றைய தினம் முழுமையாக முடக்கம்!

நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் இயல்புநிலை இன்றைய தினம் முழுமையாக முடங்கியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஏ9 பிரதான வீதியில் வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டமின்றி வீதி வெறிசோடியிருந்தது.

இருப்பினும் வைத்தியசாலைக்கு செல்பவர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.

அத்தோடு நோயாளர் காவு வண்டியும் வீதியில் காணமுடிந்தது. வீதியெங்கும் இராணுவத்தினர் கடமையிலிருந்தனர் . ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உந்துருளிகளிலும் இராணுவத்தினர் ஆங்காங்கே கடமைகளில் இருந்தனர்.

Previous articleயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கோவிட் தொற்று!
Next articleநேற்றையதினம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!