காட்டு யானை தாக்கிய நிலையில் சிறு காயங்களுடன் காப்பாற்றபட்ட இளைஞர்!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக் கடந்தான் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கிய நிலையில் சிறு காயங்களுடன் இளைஞர் ஒருவர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த இளைஞர் பெரிய மடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தை பார்வையிட்டு பின்னர் மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரப்புக்கடந்தான்-கட்டுக்கரை குள , வீதியில் மறைந்திருந்த காட்டு யானை இளைஞரை தாக்கியுள்ளது.

இதன் போது இளைஞர் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்த நிலையில் யானை மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இளைஞர், காயங்களுக்கு உள்ளான நிலையில் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleமன்னார் உப்புக்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி!
Next articleமுள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு