இலங்கையில் 256,004 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி முழுவதுமாக செலுத்தப்பட்டது!

ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) 11,385 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் 256,004 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி முழுவதுமாக போடப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று 61,882 பேருக்கு சினோஃபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 276,762 ஆக காணப்படுகின்றது.

இதற்கிடையில் 14,673 பேருக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous articleமுள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு
Next articleகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,991பேர் பாதிப்பு- 44பேர் உயிரிழப்பு!